
தமிழக திரையரங்குகளில் நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தீபாவளிக்கு வெளியாகும் 3 படங்களுக்கு இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு உத்தரவுப்படி தியேட்டர்களில் சினிமா கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ரூ.100-க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது.
தொடக்கத்தில் தமிழக அரசு கேளிக்கை கட்டணமாக 30 % அறிவித்தது. இந்த கேளிக்கை வரி விகிதம் திரையுலகினர் எதிர்ப்பால் 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதையும் திரையுலகினர் ஏற்க மறுத்ததால் மேலும் 2 சதவீதம் குறைத்து 8 சதவீதமாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சினிமா டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது.
அதன்படி மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் 150 ரூபாயாகவும் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.100 ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.80 என்றும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாளை முதல் இந்த மூன்று வகை கட்டணங்களாலும் டிக்கெட் விலை கணிசமாக உயர்கிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அரசு அறிவித்துள்ள அதிகபட்ச கட்டணம் 150 ரூபாயுடன் ஜி.எஸ்.டி, கேளிக்கை வரியையும் சேர்த்து ரூ.206 புதிய கட்டணமாக வசூலிக்கப்படும்.
குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் 127 ரூபாய் 44 காசுகளும் குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் 101 ரூபாய் 95 காசும் வசூலிக்கப்படும்.
இந்த சினிமா கட்டண உயர்வு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் கட்டண உயர்வை பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வருவார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.