
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தன்னை மறந்து டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்கும் போது, திடீர் என... அவரது குடும்ப உறுப்பினர் யாரோ ஒருவர் அவரை செருப்பால் அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி-க்கு முன்னணி நடிகைகளுக்கு உள்ளது போன்றே பல ரசிகர்கள் உள்ளனர். இவர் எது செய்தாலும் அது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி விடுகிறது. இவரை மிகவும் தைரியமான பெண்மணி என பெருமை படுத்தும் விதமாக 'தலைவி' படக்குழு இவருக்கு அழகிய காஞ்சிபுர பட்டு சேலை ஒன்றையும் பரிசாக அனுப்பி கௌரவித்தது.
அதே போல் எவ்வளவு பெரிய நடிகர் - நடிகைகள் இவருடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அவர்களை தன்னுடைய கலகலப்பான பேச்சால், குழந்தையாகவே மாற்றி விடுவார். அந்த வகையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கிய போது, நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நிறைவடைந்தது முதல் பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் டிடி பதிவு செய்த ஒரு வீடியோவில் அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தினர் யாரோ ஒருவர் திடீர் என செருப்பை வீசி அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அவர் 'விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ன்னு நெனச்சு, சரி ட்ரெண்டிங்கில் ஒன்று ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்சன் இதுதான், அதை பார்த்து சிரிச்சுட்டு போங்க, செம அடி' என்று கலகலப்புடன் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.