நான் இல்லவே இல்லை... ரசிகர்களை அலர்ட் செய்த வடிவேலு! பிறந்தநாளில் அடுத்தபடம் குறித்து வாயைவிட்ட வைகை புயல்!

Published : Sep 13, 2021, 11:00 AM IST
நான் இல்லவே இல்லை... ரசிகர்களை அலர்ட் செய்த வடிவேலு! பிறந்தநாளில் அடுத்தபடம் குறித்து வாயைவிட்ட வைகை புயல்!

சுருக்கம்

'நாய் சேகர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நேற்று கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய வைகைப்புயல் வடிவேலு, மிகவும் கலகலப்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.  

'நாய் சேகர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நேற்று கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய வைகைப்புயல் வடிவேலு, மிகவும் கலகலப்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.

சுமார் 10 வருடங்களுக்கு பின் வைகை புயல் வடிவேலு, தன்னுடைய பிறந்தநாளை... இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் 'நாய் சேகர்' படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலானது. அதில் இதுவரை இல்லாத அளவிற்கு, வடிவேலு பூரித்த புன்னகையுடன் காணப்பட்டார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த பிறந்த நாள் தினத்தில் புதிதாக பிறந்தது போல் உணர்வதாக உணர்ச்சிவசம் பொங்க பேசினார்'. 

அதேபோல் பல பிரச்சனைகளை கடந்து தற்போது 'நாய் சேகர்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க காத்திருப்பதாக தெரிவித்தார்.

மக்களை சிரிக்கவைக்கும் இந்த பணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது, சிறு குழந்தைகள் கூட என்னை மாதிரி முக பாவனை செய்வது தனக்கு அளவிலாத மகிழ்ச்சி இதனை கடவுள் எனக்கு கொடுத்த வாரமாகவே பார்க்கிறேன். அதே போல் திரை துறையில் எனக்கு போட்டியாக என்னை மட்டுமே நினைக்கிறன். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் முந்தைய படத்தை விட சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பேன் என தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய பெயரில் பல போலி சமூக வலைதள பக்கங்கள் வலம் வருகிறது என கேள்வி பாட்டன். அப்படி நான் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களிலும் இல்லவே இல்லை என தெரிவித்தார். மேலும் நாய் சேகர் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் அவர் தன்னுடைய தீவிர ரசிகர்கள் என கூறியது மட்டற்ற மகிழ்ச்சி என கூறினார். அதே போல் இந்த பிறந்தநாள் வடிவேலுவை வைத்து நலன் குமார சாமி ஒரு படத்திற்காக பேசி வருவதாகவும், இது குறித்த பேச்சு வார்த்தையில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Horror Web Series: இரவில் தனியாகப் பார்க்காதீங்க! விடுதியில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்... ஓடிடியில் மிரட்டும் வெப் சீரிஸ்
Bigg Boss : பிக் பாஸில் முதல் ஓபன் நாமினேஷன்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்? முழு லிஸ்ட் இதோ