"அஜித் சார் ஹாய் சொன்ன தொனியைப் பார்த்து வியந்துபோனேன்"! தல-யுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நவ்தீப்

By manimegalai aFirst Published Sep 13, 2021, 11:52 AM IST
Highlights

தல அஜித்துடன், நடிகர் நவ்தீப் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தல அஜித்துடன், நடிகர் நவ்தீப் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.  மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'வலிமை' படத்தின் பெரும்பாலான காட்சிகளை படக்குழு ஹைதராபாத்தில் எடுத்து முடித்தாலும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு... அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. இந்நிலையில், கடந்த மாதம் சுமார் அஜித் உட்பட 20 பேருடன் படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். ஒரே வாரத்தில் படப்பிடிப்பை எடுத்து முடித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்த்த நிலையில் படக்குழுவினர் சென்னை திரும்பினாலும், அஜித் ரஷ்யாவில் 5000 கிலோ மீட்டர் பைக் பயணத்தை கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இவர் ரஷ்யாவில் சில பைக் ரைடர்ஸ்சுடன் சேர்ந்து பைக் ரைடிங் செய்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நவதீப், அஜித்துடன் ஹைதராபாத்தில் பைக் ரைடிங் செய்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அஜித் குறித்து பகிர்துகொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்... "அஜித் சார் ஹாய் சொன்ன விதத்தை பார்த்து நான் வியர்ந்து போய் விட்டேன். அவர் ஹாய் சொன்னது, அவரை நான் பல முறை சந்தித்துளேன் என்கிற உணர்வை கொடுத்தது. அவரது எளிமை மற்றும் குணத்தை கண்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் அவர் ஒரு அற்புதமான மனிதர் என தெரிவித்துள்ளார். இவரது பதிவு மற்றும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

with 😍👌 pic.twitter.com/wYrYQG4rp6

— Studio Flicks (@StudioFlicks)

click me!