
மௌன ராகம் தான் ராஜா ராணி, சத்ரியன் தான் தெறி அப்ப இந்த விஜய் அட்லீ படம் எதோட ரீமேக்காக இருக்கும் என்று தேடியவர்கள் கடைசியில் அந்த உண்மையை கண்டுபிடித்தே விட்டார்கள்.
அப்பாவையும் அம்மாவையும் வில்லன் கொன்று விடுவான். பிறக்கும் இரட்டையர்களில் ஒருவர் வில்லனைப் பற்றி தெரிந்துகொண்டு பழி வாங்க சபதம் எடுப்பார். இன்னொருவர் வில்லன்,
பழி வாங்கல் பற்றி எதுவுமே தெரியாமல் அந்த பழி வாங்கலில் வந்து அப்பாவியாக மாட்டிக்கொள்வார். அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் உட்பட பல படங்களின் கதை முடிச்சு தான் இது. இந்தக் கதையைத் தான் தூசி தட்டி எடுத்து வருகிறாராம் அட்லீ.
இதற்குள் மருத்துவமனைகளின் கொள்ளை, உறுப்பு திருட்டு, ஒரு விஜய் அப்பாவை கொன்ற அப்பாவின் நண்பன் மருத்துவமனையிலேயே மருத்துவராக பணிபுரிவது, இன்னொரு விஜய் மேஜிஷியனாக இருந்துகொண்டு அப்பாவைக் கொன்றவனை பழி வாங்குதல் என்று மசாலாவைத் தூவி இருக்கிறார்களாம்.
ராஜமௌலியின் ஃபேவரிட் திரைக்கதை ஆசிரியரான விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்துக்கு திரைக்கதை என்பதால் இன்னும் மசாலா இருக்கும் என நம்பலாம்.
எப்படியாக இருந்தால் என்ன... ஹிட் ஆக்கி விடுவார் அட்லீ... அடுத்த படத்தில் சம்பளம் 20 கோடி ஆகி விடும்.
பொழைக்க தெரிஞ்ச புள்ள!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.