’இப்பிடி தரைமட்டத்துக்கு வந்துட்டீங்களே தங்கர்பச்சான்?’

By manimegalai aFirst Published Oct 2, 2018, 2:52 PM IST
Highlights

சுமார் ஐந்தாறு வருடங்களாக கிடப்பில் கிடந்து, அப்படியே நிரந்தரமாகவே கிடந்திருக்கலாமோ என்கிற அளவுக்கு ஓடிய தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகளுக்கு அப்புறம், வீட்டில் மோட்டுவளையைப் பார்ப்பது தவிர்த்து வேறு எந்த வேலயுமற்றவராகிப் போனார் அச்சன்.

’இப்பிடி தரைமட்டத்துக்கு வந்துட்டீங்களே தங்கர்பச்சான்?’

சுமார் ஐந்தாறு வருடங்களாக கிடப்பில் கிடந்து, அப்படியே நிரந்தரமாகவே கிடந்திருக்கலாமோ என்கிற அளவுக்கு ஓடிய தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகளுக்கு அப்புறம், வீட்டில் மோட்டுவளையைப் பார்ப்பது தவிர்த்து வேறு எந்த வேலயுமற்றவராகிப் போனார் அச்சன்.

அவ்வப்போது தனது பையனை ஹீரோவாக்கும் முயற்சிகளும் படுதோல்வியில் முடிய, தற்போது மனதைக் கல்லாக்கிக் கொண்டு குணச்சித்திர நடிகர் ஆகும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். ஆண்டவா என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை?

தனது உதவியாளர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தினமும் போனைப்போட்டு, ‘என்னை மாதிரி ஒரு பெரிய கலைஞனை வீட்டுல சும்மா உட்கார வச்ச இந்த தமிழ் சினிமா நாசமாத்தான் போகும்’ என்று சபித்து முடித்துவிட்டு, ‘ இனிமே எனக்கு ஹீரோ சான்ஸ் வராது, அதனால கேரக்டர் ஆர்டிஸ்டா நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். நீங்க வேலை செய்யிற படங்கள்ல ‘அப்பா,சித்தப்பா, அண்ணா,பெரியண்ணா,மாமா, வில்லன்,கள்ளன்னு என்ன கேரக்டர் குடுத்தாலும் நடிக்கிறேன்பா’ என்கிறாராம்.

இங்கே தங்கர் வேட்டிய மடிச்சிக்கட்டி வீறாப்பாக குணச்சித்திர கோபத்தோடு நிற்பது பிரபுதேவாவின் ‘எங் மங் சங்’ படத்துக்காக.

click me!