
மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் மண், தமிழ் தேசியம், தமிழ்ப் புண்ணாக்கு என்று முழங்கி வரும் இயக்குநர் தங்கர் பச்சான் தன் மகனுக்கு விஜித் பச்சான் என்றொரு விநோதப் பெயர் வைத்திருப்பது பலத்த விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
‘மலைச்சாரல்’என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அஜீத்தின் ‘காதல்கோட்டை’ மூலம் பிரபலமாகி ‘அழகி’படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தவர் தங்கர்பச்சான். முதல் இரண்டு படங்களான ‘அழகி’,’சொல்ல மறந்த கதை’க்குப் பின்னர் தொடர்ந்து குப்பைப் படங்களைக் கொடுத்துவந்த தங்கர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து தான் மிகவும் விரும்பிய தமிழ் சமூகத்தை இம்சிக்க ஆரம்பித்தார்.
இதனால் அவர் சினிமாவிலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து ஒரு படம் இயக்கப்போவதாக பூஜை போட்டார். அந்த ஹீரோவுக்கு விஜித் பச்சான் என்ற வினோத பெயர் சூட்டியதை வலைதளவாசிகள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய் பெயரில் முதலெழுத்தையும் மீதி இரண்டு எழுத்துக்களை அஜீத் பெயரிலிருந்தும் எடுத்து தங்கர் தனது மகனுக்கு வி’ஜித் என்று பெயர் சூட்டியிருப்பதாக வலுவாக நம்பப்படுகிறது. வழக்கமாக சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்கும்போதெல்லாம் ‘எங்க என்னங்க நடக்குது இங்க?’என்றுதான் தங்கர்பச்சான் கொந்தளிப்பார். அதே கேள்வியை தமிழ் சமூகம் தற்போது தங்கரை நோக்கிக்கேட்கிறது ‘ஏங்க தங்கர்பச்சான் என்னங்க நடக்குது இங்கே?’.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.