சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்? இயக்குனர் பா.இரஞ்சித் கொடுத்த அசத்தல் அப்டேட்

By Ganesh A  |  First Published Dec 27, 2023, 12:24 PM IST

பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலிக்கும் பா.ரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல் அவர் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். 

அந்த வகையில் ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்கிற நிகழ்ச்சியை ஆண்டுதோறு நடத்தி வருகிறார் பா.இரஞ்சித். பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியாக இதை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. அதன்படி கர்நாடாக மாநிலம் கோலாரில் அமைந்திருந்திருக்கும் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதி இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடங்கியது.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து இதன் இரண்டாவது நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு பாரம்பரிய கலைஞர்களுடன் நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் கிருஷ்ணகிரியிலும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையில் மார்கழியில் மக்களிசை தொடங்க உள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். 

அதன்படி சென்னையில் வருகிற டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எல்லோரும் வாங்க! ஆண்டின் இறுதியை மக்களிசை கலைஞர்களோடு கொண்டாடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் என பா.இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

from tomorrow in எல்லோரும் வாங்க! ஆண்டின் இறுதியை மக்களிசை கலைஞர்களோடு கொண்டாடுவோம்! 💥💥💥❤️
Date:28,29 & 30
Place: Santhom higher secondary school, Sullivan St.Kuil Thoppu, Mylapore Chennai.
Time: from 2:30 pm 💥💥💥💥 pic.twitter.com/agDQtA2nOE

— pa.ranjith (@beemji)

இதையும் படியுங்கள்... சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கினார் நடிகர் சூர்யா.... வெளியான அசத்தல் அறிவிப்பு

click me!