பாராசைட் என்கிற தென் கொரிய படத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பாராசைட் என்கிற தென் கொரிய படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 48. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் விசாரணையும் நடத்தி உள்ளனர்.
போலீஸ் விசாரணைக்கு பின்னர் லீ சன் கியூன் இப்படி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராது கொலை செய்துள்ளார்களா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். லீ சன் கியூன் கடந்த 1975-ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். இவர் பாராசைட் திரைப்படத்தில் பணக்கார தந்தையாக நடித்திருந்தார்.
பாராசைட் திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளை கொத்தாக அள்ளிச் சென்று உலகளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... எனக்கு வருத்தம்பா! ரஜினியின் அரசியல் முடிவும்... லதா ரஜினிகாந்தின் ரியாக்ஷனும்