"மாஸ்டர்" ஷூட்டிங்கிற்கு மறுபடியும் ஆப்பு...நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் வருமான வரித்துறை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 10, 2020, 12:22 PM IST
Highlights

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

"பிகில்" பட விவகாரம் தொடர்பாக கடந்த 5ம் தேதி அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் 3 நாட்களாக சோதனை நடைபெற்றது. அந்த சோதனையின் போது சென்னை மற்றும் மதுரையில் உள்ள அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலங்களில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாய் ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அன்புச்செழியன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதும் அம்பலமானது. 

ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் மூலமாகவே நடிகர் விஜய் சம்பள விவகாரம் வெளியில் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்தே நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது. ஆனால் விஜய்யிடம் இருந்து சல்லிகாசு கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய் மீண்டும் நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். 

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம், ஏஜிஎஸ் நிர்வாகிகள் ஆகியோரும் இன்று ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் மீண்டும் மாஸ்டர் பட ஷூட்டிங்கை கேன்சல்  செய்துவிட்டு, விஜய் சென்னை வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

click me!