10 வயது மகள் சம்மதத்துடன் காதலனுடன் இரண்டாம் திருமணம்! பிரபல நடிகைக்கு விரைவில் டும் டும் டும்!

By manimegalai aFirst Published Feb 10, 2020, 11:20 AM IST
Highlights

விவாகரத்தான நடிகைகள், பலர் முதல் திருமணம் தோல்வி அடைந்ததால், தங்களுடைய இரண்டாவது திருமணம் செய்து கொள்வது  வழக்கமான ஒன்று தான்.
 

விவாகரத்தான நடிகைகள், பலர் முதல் திருமணம் தோல்வி அடைந்ததால், தங்களுடைய இரண்டாவது திருமணம் செய்து கொள்வது  வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் சீரியல் நடிகை கம்யா பஞ்சாபி  தன்னுடைய பெற்றோர் மற்றும், 10 வயது மகள் சம்மதத்துடன் இரண்டாம் திருமண வாழ்க்கையில் இணைய உள்ளார்.

சனி கிழமை அன்று, ஷாலாப் டங் என்கிற அவருடைய காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு, நடிகை கம்யா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் தன்னுடைய மகள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறதை என்பதை தெரிவிக்கும் விதமாக, மகளுடன் தான் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

click me!