
நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வந்த பாண்டவர் அணியின் பதவி காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த வருடம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், மீண்டும் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் போட்டியிட்டனர் அவர்களை எதிர்த்து, பாக்யராஜ் தலைமையில் 'சுவாமி சங்கரதாஸ்' அணியினர் களம் கண்டனர்.
மேலும் தேர்தலின் போது காரணமின்றி சில உறுப்பினர்களை, நடிகர் சங்கத்தில் இருந்து தூக்கியதாக குற்ற சாட்டுகள் எழுந்தது. அதே போல் வெளியூரில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு தபால் ஓட்டுகள் வந்து சேரவில்லை என்றும், ஓட்டு போட நேரடியாக வந்த போது, அவர்கள் ஓட்டு போட மறுக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என, அறிவிக்க கூறி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதி மன்றம், இந்த தேர்தல் செல்லாது என தீர்ப்பு வழங்கியது. எனவே விரைவில் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், சற்றும் அடங்காத நடிகர் விஷால், அதிரடியாக நடிகர் சங்க தேர்தல் பற்றி உயர்நீதி மன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளார்.
இதில் ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். ஜூன் 23 ஆம் தேதி நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது குறித்தும் நடிகர் விஷால் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.