மணிரத்னத்துக்கு பிளாப்; வெங்கட் பிரபுவுக்கு வெற்றி தருமா? GOAT ட்ரைலர் சொல்லும் கதை என்ன?

By Ansgar R  |  First Published Aug 17, 2024, 5:10 PM IST

GOAT Trailer : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவருடைய 68வது திரைப்படமான "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம்வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக தளபதி விஜய் இணைந்த திரைப்படம் தான் லியோ. உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமாக அது மாறியது. இந்த சூழ்நிலையில் தான் தனது 68வது திரைப்பட அறிவிப்பை அறிவித்தார் தளபதி விஜய். இயக்குனரான வெங்கட் பிரபு முதல் முறையாக தளபதி விஜயை இயக்க தொடங்கினார். அந்த திரைப்படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்பட பணிகள் நடந்து வந்த நேரத்திலேயே, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, தனது சினிமா வாழ்க்கைக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்து விட்டு, முழு நேர அரசியல் தலைவராக தான் களமிறங்க உள்ளதாக தளபதி விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவத்தை தந்து என்றே கூறலாம்.  

Tap to resize

Latest Videos

undefined

அன்று தனது நிறத்தால் ரிஜெக்ட் ஆன நடிகை; இன்று பான் இந்தியா ஸ்டார்; நடிகரின் வருங்கால மனைவி!

இதனை அடுத்து தளபதி விஜயின் 68வது மற்றும் 69வது திரைப்படங்கள் மிக முக்கியமான மற்றும் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியது. இந்த சூழலில் தளபதி விஜயின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வருகிறது. 

செக்கச் சிவந்த வானம் 

கடந்த 2018ம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் செக்கச்சிவந்த வானம். தமிழ் சினிமாவில் மிக குறைந்த அளவிலேயே எடுக்கப்பட்ட படங்களில் "மல்டி ஸ்டார் கேஸ்டிங்" கொண்ட திரைப்படங்களும் ஒன்று. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களை ஒரே திரைப்படத்தில் இணைத்து மணிரத்தினம் எடுத்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

 

வெங்கட் பிரபு 

ஆனால் இப்பொழுது தமிழ் சினிமாவின் கிளாசிக் சூப்பர் ஹிட் ஹீரோக்கள் மூவரை ஒரே படத்தில் இணைத்து GOAT என்ற புதிய பிளானை போட்டுள்ளார் வெங்கட் பிரபு. சில நண்பர்கள் RAW போன்ற ஒரு உளவுத்துறையில் பணியாற்றுகிறார்கள். ஒருகட்டத்தில் அந்த பணியில் இருந்தும் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்கள் மிச்சம் வைத்த ஒரு பகை அவர்களை தீர்த்துக்கட்ட துடிக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதே கதை.  ஆகவே மணிரத்னத்துக்கு கைகொடுக்காத ஃபார்முலா வெங்கட் பிரபுவுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் ஹீரோ ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

click me!