
சென்னை 28 படம் மூலம் அறிமுகமாகி மங்காத்தா, சரோஜா என மாஸ் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் கோட். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிகில் படத்துக்கு பின் அவர் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் இதுவாகும். இப்படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யை யங் லுக்கில் காட்டி உள்ளனர்.
கோட் படத்தில் விஜய்யுடன் பிரேம்ஜி, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், வைபவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் 5 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
கோட் ட்ரெய்லர்ல பாத்ததுலாம் ஒன்னுமே இல்ல. VP மிரட்டி விட்டுட்டாப்ல. விஜய் செம்மயா எஞ்சாய் பண்ணி நடிச்சிருக்காப்ல. சொல்றதுக்கு ஏகப்பட்டது இருக்கு. சொன்னா ஸ்பாய்லர் ஆகிடும். இங்கலாம் தியேட்டர்ல கத்துவானுங்கன்னு இன்னிக்கு தான் தெரிஞ்சது. அதும் விஜயகாந்த் சீனுக்கு லாம் வெறித்தனமா இருந்தது என பதிவிட்டுள்ளார்.
கோட் படம் பிளாக்பஸ்டர். அதன் இரண்டாம் பாதியில் சில குறைகள் இருந்தாலும் விஜய் - வெங்கட் பிரபு காம்போ ஒரு கமர்ஷியல் விருந்தாக இப்படத்தை கொடுத்திருக்கிறது என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
கோட் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு உள்ளது. சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கிறது. விறுவிறுப்பான முதல் பாதியும், வெறித்தனமான கிளைமாக்ஸ் உடன் இரண்டாம் பாதியும் வியத்தகு கேமியோக்கள், டீ ஏஜிங் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. மொத்தத்தில் இது ஒரு தளபதி விஜய் ஷோ என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
கோட் படத்தின் இரண்டாம் பாதியில் சம்பவம் பண்ணிருக்காங்க. பக்கா எண்டர்டெயின்மெண்ட். கடைசி 30 நிமிஷம் வெறித்தனமா இருக்கு. நிறைய ட்விஸ்ட் மற்றும் புல்லரிக்க வைக்கும் காட்சிகள் இருக்கு. என்ன மாதிரி திரைக்கதை. விஜய்யின் எல்லா படங்களையுடம் விட கோட் இரண்டாம் பாதி வேறலெவல்ல இருக்கு என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக கோட்டை கொடுத்துள்ளனர். விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார். உடல்மொழியிலும் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். டீ ஏஜிங் டெக்னாலஜி டாப் கிளாஸாக உள்ளது. முதல் பாதி விறுவிறுப்பாக உள்ளது. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும் கிளைமாக்ஸ் வேறலெவலில் இருக்கிறது. மொத்தத்தில் நிறைய ட்விஸ்டுகளுடன் சர்ப்ரைஸ் நிறைந்த படமாக உள்ளது கோட். இப்படத்திற்கு 5க்கு 3.5 ரேட்டிங்கும் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து ஹிட்டானதைவிட பிளாப் ஆன படங்கள் தான் அதிகமா! அப்போ கோட் நிலைமை?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.