இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படத்தை பார்த்து விட்டு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த 23ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் 'வாழை'. பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல், எதார்த்தமான கதைக்களத்தில்... வாழை மரத்திற்கு பின்னால் மறைந்திருக்கும், பலரது வலிகளையும் உணர்வுகளையும் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது இந்த திரைப்படம்.
'வாழை' படத்தின் மூலம், தன்னுடைய சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களை இந்த உலகத்திற்கே காட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். வாழை தொழிலாளர்களின் வேதனைகளை வெளிப்படையாக பேசியுள்ள இந்த திரைப்படம், தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், பாராட்டுகளை குவித்து வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!
இந்த படத்தை பார்த்த நடிகர் சூரி, இயக்குனர் பாலா, போன்ற பிரபலங்கள் கண்ணீருடன் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி தழுவி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே போல் கலையரசனின் கடுமையான உழைப்பு, நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமியின் நடிப்பு போன்றவை மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜுக்கு 'வாழை' மற்றொரு மணி மகுடமாக மாறிய நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு பாராட்டி உள்ளார்.
முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு.. திக்கு முக்காட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, " மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழைப்பழம் பார்த்தேன். ஒரு அற்புதமான தரமான படம், தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளம் பருவத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசி தாங்காமல் அழியும்போது... அந்தத் தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிட விடவில்லையே என்று கதறும் போதும்... நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தன்னை ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என கூறியுள்ளார்.