நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விஜய் போஸ்டர்... தடபுடலாக தொடங்கிய தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோ இதோ

Published : Jun 21, 2023, 09:26 AM ISTUpdated : Jun 21, 2023, 09:42 AM IST
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விஜய் போஸ்டர்... தடபுடலாக தொடங்கிய தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோ இதோ

சுருக்கம்

புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது போஸ்டர்கள் ஒளிபரப்பப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு ஊர்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளின் பசியாற்றும் விதமாக இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இரத்த தான முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தான். சமீபத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கெளரவப்படுத்தினார் விஜய். இதுதான் அவரது அரசியல் பயணத்தின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... யோகிபாபு இல்ல ஆனா இந்த காமெடி நடிகர் இருக்காராம்... விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

இதுதவிர விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் தளபதி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி ஆரவாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக வருங்கால முதல்வரே என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்திலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்களை மிஞ்சும் வகையில் வெளிநாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் அமெரிக்காவில் ஒரு மாஸ் சம்பவத்தை செய்து அசத்தி உள்ளனர்.

அதன்படி, நடிகை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கனடாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள், புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பில்போர்டில் நடிகர் விஜய்யின் போஸ்டர்கள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளதால், தளபதிக்கு இது மறக்கமுடியாத பிறந்தநாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதா.! பாஜக பெண் நிர்வாகிக்கு எதிராக சீறும் கஸ்தூரி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்