
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லோகேஷ் கனகராஜின் "லியோ" திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படங்களின் பட்டியலில் லியோ திரைப்படமும் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு முதல் பாதையில் வெளியான தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம், ரசிகர்கள் மனதை கவர்ந்தாலும், பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது முறை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. விரைவில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடையது முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் தனது 68 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
நேற்று டிசம்பர் 31 2023 அன்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்து இருந்தாலும், "தளபதி விஜய் The Greatest of All Time" என்கின்ற அந்த தலைப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு அந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சரியாக 6 மணிக்கு தளபதி விஜய் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். தந்தை மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் தளபதி விஜய் அவர்களுடைய இந்த திரைப்படம் ஒரு "பிரபலத்தை" பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா மற்றும் நடிகைகளான சினேகா மற்றும் லைலா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தாய்லாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான படபிடிப்புகள் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.