
மலையாள திரை உலகில் கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கியவர் தான் மம்மூட்டி. அன்று தொடங்கி இன்று வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக பயணித்து வருகிறார். கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் இவருடைய நடிப்பில் 33 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தான் திரையுலகில் அறிமுகமான வெகு சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய நடிகராக உருவெடுத்த மம்மூட்டி அவர்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மௌனம் சம்மதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.
'மாமன்னன்' படத்தை தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் கை கோர்க்கும் ஃபகத் பாசில்! வெளியான அறிவிப்பு!
இந்த அரை நூற்றாண்டு கலை உலக பயணத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூட்டியின் நடிப்பில் இறுதியாக வெளியான "காதல் தி கோர்" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் அவருடைய நாயகியாக பிரபல நடிகை ஜோதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஓரின சேர்க்கையாளரின் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருந்தது அப்படத்தை பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இதுபோல வித்தியாசமான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் மம்மூட்டி, அதற்கு தமிழில் இறுதியாக வெளியான அவருடைய "பேரன்பு" திரைப்படம் ஒரு சாட்சி. இந்த சூழலில் புத்தாண்டு மகிழ்ச்சியாக "பிரமயுகம்" என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார், இந்த திரைப்படத்தை எழுதி இயக்க உள்ளது ராகுல் சதாசிவன். மேலும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்பொழுது வெளியாகி உள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் இந்த படத்திற்கும் நடிக்கவுள்ளார் அவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.