தளபதி விஜய், தன்னுடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் மனோ பாலாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யுடன், தெறி, பிகில், லியோ, போன்ற படங்களில் மனோபாலா இணைந்து நடித்துள்ள நிலையில், அவரின் மரணம் குறித்து அறிந்து உடனடியாக தளபதி விஜய் நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் இயக்குனராகவும், நடிகராகவும், தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளவர் மனோபாலா. இதுவரை சுமார் 40 படங்களை இயக்கியுள்ள மனோ பாலா, 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்த பிரபலமானவர்.
மனோ பாலா கடைசி வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் மரணம்! வைரலாகும் அவரின் லாஸ்ட் ட்விட்டர் போட்டோ!
மேலும் சின்ன திரையில் இரண்டு சீரியல்களில் நடித்துள்ளது மட்டுமின்றி, மூன்று டிவி தொடர்களையும் இயக்கி உள்ளார். சுமார் 48 வருடங்களாக திரையுலகில் இருந்து வரும் மனோ பாலா... அனைத்து பிரபலன்களிடமும் மிகவும் அன்பாக பழக கூடியவர். அதேபோல் பெரிதாக எந்த ஒரு சண்டை சசர்ச்சைகளிலும் சிக்காத பிரபலமாக இருந்து வந்தார். ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாகவும், மனோபாலா சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் இருந்தே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த மனோ பாலா, இன்று பிற்பகல் 12:55 மணி அளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மறைவு குறித்த தகவல் வெளியானது முதலே தொடர்ந்து, பல பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலாகவும் நேரடியாகவும் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!
ஏற்கனவே பிரபல இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர் ஹச் வினோத், நடிகர் நட்ராஜ், போன்ற பலர் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது நடிகர் விஜய் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரம் ஆகி வருகிறது. மனோபாலா நடிகர் விஜய் உடன் தற்போது லியோ படத்திலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதி ஊர்வலம் நாளை காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thalapathy paid his last respect to Manobala. 💔pic.twitter.com/DEmZDRm3Hq
— DHEERAN (@dheeran_cinima)