
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டவர் மனோபாலா. எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக சிறுபிள்ளை போல் ஓடிக்கொண்டே இருக்கும் மனோபாலா, கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர்... மீண்டும் உடல்நலம் தேறி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகவே கல்லீரல் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அன்று அவர் பாராட்டியது என் நெஞ்சில் நிழலாடுகிறது..! மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
உடல்நலம் இன்றி, வீட்டில் ஓய்வில் இருந்தாலும்... துரு துறுவென வீட்டில் இருந்தபடியே தான் நடத்தி வரும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூ டியூப் தளத்தின் பணிகளை மேற்கொண்டு வந்தார். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும், இவருக்கு... நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவருமே மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால், அவர்களிடம் பேட்டி எடுத்து அதையும் தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் வெளியிடுவார்.
அந்த வகையில் கடைசியாக மனோபாலா தன்னுடன் பல படங்களில் நடித்த, நடிகை கோவை சரளாவை பேட்டி கண்ட வீடியோவை, வேஸ்ட் பேப்பர் youtube தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியிட்டு 24 மணி நேரம் ஆவதற்கு உள்ளாகவே, மனோபாலா உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல ர் அவரது youtube தளத்தில் அவரது வீடியோவுக்கு கீழ் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல் ட்விட்டரில் கடைசியாக சிவப்பு நிற வேஷ்டி சட்டையில், ஆன்மீக பக்தியோடு சித்தர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.
மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.