ஐ.டி.ரெய்டை அடுத்து அதிரடியாக கிளம்பிய "மாஸ்டர்"...லவ்வர்ஸ் டே-யில் "குட்டி கத" சொல்லி கதறடிக்க போகும் விஜய்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 11, 2020, 05:33 PM ISTUpdated : Feb 11, 2020, 05:50 PM IST
ஐ.டி.ரெய்டை அடுத்து அதிரடியாக கிளம்பிய "மாஸ்டர்"...லவ்வர்ஸ் டே-யில் "குட்டி கத" சொல்லி கதறடிக்க போகும் விஜய்!

சுருக்கம்

வருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா, அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. காரணம் நெய்வேலியில் படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதும், வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதும் தான்.


இதையடுத்து தங்களது சப்போர்டை தெரிவிக்க நெய்வேலியில் குவிந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டார் விஜய். அரசியல் காரணங்களுக்காக விஜய் பழிவாங்கப்படுவதாக அவரது ரசிகர்கள் பொங்கியெழுத்தனர். 

இதையும் படிங்க: "இதுதான் தளபதியின் கணக்கில் வராத சொத்து"... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய விஜய் ஃபேன்ஸ்...!

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடப்பு விஷயங்கள் குறித்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய், இம்முறை என்ன பேசப்போகிறார், வருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா, அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதையும் படிங்க: சும்மா இருந்தவரை தூண்டிவிட்டு "சூப்பர் ஸ்டார்" ஆக்கிய ஐ.டி.ரெய்டு...தளபதியின் மாஸ்டர் செல்ஃபி பார்த்த வேலை...!

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் பலரும் மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குட்டி கத என தொடங்கும் அந்த பாடலை கேட்க விஜய் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கின்றனர். 

இந்த விடியோவை பாருங்க: விஜயின் செல்ஃபி அரசியல்.. பகீர் கிளப்பும் பின்னணி வீடியோ..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்