தளபதி விஜய் நடிப்பில் வெளியான, லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் தற்போது நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
11:19 PM (IST) Nov 01
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை என்னொட படத்தில வில்லனா நடிக்க வைக்க முயற்சி பண்ணினேன், முடியல.. எனக்கு வெற்றிமாறன் அவர்களை நடிகரா மாத்தனும், சீக்கிரம் மாத்துவேன்னு நினைக்கிறேன் என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.
10:57 PM (IST) Nov 01
மக்கள் என்னை எங்கு பார்த்தாலும் ஜெய்ஹிந்துன்னு சொல்வார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு ‘த்தேறிக்க’ என்கிறார்கள் என்று கூறினார் நடிகர் அர்ஜுன்.
10:05 PM (IST) Nov 01
விஜய் எப்போதும் நிற்க வைத்து யாருடனும் பேசமாட்டார். நாம் பேசப்போனாலே அமர வைத்து தான் பேசுவார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.
09:28 PM (IST) Nov 01
லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே மட்டுமின்றி, தமிழ் சினிமா வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
09:02 PM (IST) Nov 01
விஜய்க்கு தங்கை கதாப்பாத்திரம் என சொன்னதும், கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் விஜய், திரிஷா, அர்ஜூன் சஞ்சய் தத் போன்றவர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
08:47 PM (IST) Nov 01
தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடிகர் விஜய் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். கடுமையாக உழைக்க காத்திருங்கள். உங்களை நம்பி தான் இந்த நாடு உள்ளது என்று பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலி கான்.
08:25 PM (IST) Nov 01
விஜய் அனைவரையும் சமமாக நடத்தக்கூடியவர். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று இயக்குனர் ரத்தினகுமார் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசினார். ரஜினி கழுகு கதையை மறைமுகமாக விமர்சித்ததால் விஜய் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.
08:24 PM (IST) Nov 01
ஷாஜகான் படத்தில் இருந்து விஜயுடன் பணியாற்றி வருகிறேன். அன்று முதல் இன்று வரை சிறு மாற்றம் கூட அவரிடம் இல்லை. அவருடன் பணியாற்றிய அனைத்து பாடல்களுமே ஸ்பெஷல் தான். மன்சூர் அலிகானை ஆட வைக்க சிரமமாக இருந்தது. நான் ஒன்று சொல்லி கொடுத்தால் அவர் ஒன்று ஆடுவார் என்று கூறியுள்ளார் பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.
08:02 PM (IST) Nov 01
மலையாள தொலைக்காட்சி நடிகை டாக்டர் பிரியா 35 வயதில் மாரடைப்பால் காலமானார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
07:10 PM (IST) Nov 01
தளபதி விஜய் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி, மிகவும் எளிமையாக சந்தன நிற ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு வருகை தந்த காட்சி இதோ..
07:06 PM (IST) Nov 01
'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, மிரட்டியுள்ள இயக்குனர் மிஷ்கின் சற்று முன்னர், இப்படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு வந்தார். இதுகுறித்த காட்சிகள் இதோ..
07:04 PM (IST) Nov 01
லியோ திரைப்படத்தில், தளபதி விஜய்க்கு சித்தப்பாவாக நடித்து மிரட்டி இருந்த நடிகர் அர்ஜுன் சர்ஜா சற்று முன்னர், இப்படத்தில் சக்ஸஸ் மீட்டுக்கு வந்தார்.
06:59 PM (IST) Nov 01
தளபதி விஜய்யை வரவேற்க, பிரத்தேயேகமாக LED ஸ்கிரீன் வைக்கப்பட்டு... இருபுறமும் தளபதி விஜயின் புகைப்படங்கள் ஓட விடப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
06:59 PM (IST) Nov 01
தளபதி விஜய்யை வரவேற்க, பிரத்தேயேகமாக LED ஸ்கிரீன் வைக்கப்பட்டு... இருபுறமும் தளபதி விஜயின் புகைப்படங்கள் ஓட விடப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
06:50 PM (IST) Nov 01
லியோ திரைப்படத்தில் சீரியல் கில்லராக நடித்த, சாண்டி இப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் வைப் மோடுக்கு மாறி செம்ம கியூட்டாக ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
06:47 PM (IST) Nov 01
'லியோ' திரைப்படத்தில், நடிகர் மன்சூர் அலிகான் இருதயராஜ் டிசௌசா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறிய வேடம் என்றாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், சக்ஸஸ் மீட்டில் ரசிகர்கள் அவருக்காக ஆர்பரித்ததை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
06:31 PM (IST) Nov 01
இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வரும் நிலையில் தற்போது, விஜயின் தாயார் சோபனா தன்னுடைய மகன் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அடுத்தடுத்து பல பிரபலங்கள் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்து உள்ளனர்.
06:25 PM (IST) Nov 01
'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மேலும் படிக்க