GOAT : ரத்த வெறியை தூண்டும் தளபதி விஜய்.. DGP அலுவலகத்தில் பரபரப்பு புகார் - என்ன காரணம்? முழு விவரம்!

Ansgar R |  
Published : Apr 15, 2024, 03:28 PM IST
GOAT : ரத்த வெறியை தூண்டும் தளபதி விஜய்.. DGP அலுவலகத்தில் பரபரப்பு புகார் - என்ன காரணம்? முழு விவரம்!

சுருக்கம்

Complaint Against Thalapathy Vijay : தளபதி விஜய் குரலில் நேற்று GOAT திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியானது. இந்நிலையில் அதை எதிர்த்து சென்னை DGP அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் முதல்முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இந்த திரைப்பட த்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், நேற்று இந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் மதன் கார்க்கி அவர்களுடைய வரிகளில் வெளியானது. 

இந்த பாடல் வெளியானதில் இருந்து அவருடைய ரசிகர்கள் அதனை மிகப்பெரிய அளவில் வைரலாக மாற்றி வரும் நிலையில், தற்போது "விசில் போடு" பாட்டுக்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில்... "நடிகர் விஜய் அவர்கள் பிரச்சினையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்". 

பிரமாண்டமாக நடந்த ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் திருமணம்! ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

"தற்பொழுது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகி உள்ள விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டதிட்டத்தின்படி போதைப்பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம்பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும், ஆனால் நடிகர் விஜய் அதை செய்யவில்லை". 

"அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் திறக்கட்டுமா? தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் மற்றும் ரவுடிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது". 

"மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியல் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது". 

"இடி இடிச்சா என் வாய்ஸ்ல தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்", நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும் தொனியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய்". என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Malavika : கடல் கன்னியா? இல்ல கவர்ச்சி கன்னியா? மாளவிகாவின் பிகினி போட்டோஸ் பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!