உடனே எல்லாம் வர முடியாது... வருமான வரித்துறை சம்மனுக்கு அவகாசம் கோரிய விஜய்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 10, 2020, 1:24 PM IST
Highlights

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்பான ஷூட்டிங் நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றிருந்த போதுதான் நடிகர் விஜய்யை பிகில் பட விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: 'ஐயம் பேக்'... விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் ஜெயஸ்ரீ... வைரலாகும் அதிரடி அறிவிப்பு...!

மேலும் விஜய்க்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங்கில் பங்கேற்றார் விஜய். 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

நெய்வேலியில் விஜய் - விஜய்சேதுபதி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஏற்கனவே தன்னால் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நின்று போனதால் செம்ம அப்செட்டில் இருந்த விஜய், வருமான வரித்துறையின் சம்மனுக்கு ஆஜராக காலஅவகாசம்  வேண்டுமென்று கோரியுள்ளார். 
 

click me!