தர்பார் ரஜினியையே தட்டித்தூக்கிய விஜய்... தளபதி 66 படத்திற்கு சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Aug 19, 2021, 8:03 PM IST
Highlights

தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் கடைசியாக வாங்கிய சம்பளம் 108 கோடி ரூபாயாம், தற்போது அதைவிடவும் அதிகமாக விஜய் சம்பளம் வாங்கியுள்ளது கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. 

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் தற்போது 'தளபதி 65 ' ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழு ரஷ்யா புறப்பட தயாராகியுள்ளது. அதற்குள் விஜய் 66 படத்தை இயக்க உள்ள இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் 'மகரிஷி' என்கிற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த, இயக்குனர் வம்சி தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளாராம். 

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும், மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராக உள்ளதும் ஏற்கனவே வெளியான செய்தி. லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்திற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.'மாஸ்டர்' படத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் பைலிங்குவல் படம் என்பதால் தமிழுக்கு 80 கோடி, தெலுங்கு மார்க்கெட்டிக்கு 40 கோடி என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் கடைசியாக வாங்கிய சம்பளம் 108 கோடி ரூபாயாம், தற்போது அதைவிடவும் அதிகமாக விஜய் சம்பளம் வாங்கியுள்ளது கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. 

click me!