'தளபதி-64' படத்தின் தலைப்பு இதுதான் ?... ஜனவரியில் ஃபர்ஸ்ட் லுக் !! விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

Published : Nov 20, 2019, 11:03 PM IST
'தளபதி-64' படத்தின் தலைப்பு இதுதான் ?... ஜனவரியில் ஃபர்ஸ்ட் லுக் !! விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

சுருக்கம்

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களுமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் 'தளபதி-64'. இதற்கு காரணம், 'பிகில்' வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யும், 'கைதி' ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கூட்டணி சேர்ந்திருப்பதுதான்.   

அத்துடன், முதல்முறையாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, விஜய்க்கு வில்லனாக நடிப்பதும் படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் எனலாம். 'கத்தி' படத்திற்குப் பிறகு 'தளபதி-64' படத்துக்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். இப்படி ஆரம்பமே எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தப் படத்தின் ஷுட்டிங், தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில், விஜய்யுடன் ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மோகனன் மற்றும் '96' புகழ் கவுரி கிஷான், 'பவி டீச்சர்' பிரிகிடா, வி.ஜே.ரம்யா, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்துள்ள படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் புகைப்படங்களை யாரும் சமூகவலைதளங்களில் பகிர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், 'தளபதி-64' படத்திற்கு 'டாக்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில், வரும் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் தேர்வு பிரச்னை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகவும், அதற்கு பொருத்தமாக 'டாக்டர்' என்ற தலைப்பை படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் வேகமாக பரவிவரும் இந்த செய்தியை அறிந்து, தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!