தளபதி விஜய்யை பாடாய்படுத்தும் கொரோனா... ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போகும் “மாஸ்டர்” ரிலீஸ்?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2020, 1:07 PM IST
Highlights

இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்துவிடும், கண்டிப்பா ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என படக்குழு நம்பிக்கை வைத்திருந்தது. 

உலகம் மக்கள் அனைவரையும் வாட்டி வதைக்கும் கொரோனா பீதி திரைத்துறையையும் சும்மா விடவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா எனும் அரக்கன் தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே திரைத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. 

மார்ச் 19ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் வலிமை, அண்ணாத்த, மாநாடு உட்பட 36 படங்களின் ஷூட்டிங்கும், 60 டி.வி. சீரியல்களின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் மாஸ்டர், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அந்த இடத்தில் யாஷிகா ஆனந்த் குத்தியுள்ள நச் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக கொடுத்த கவர்ச்சி தரிசனம்...!

இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ஏப்ரல் 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் 6 முதல் 12 வாரங்களுக்கு மூடிவைக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து தியேட்டர்கள் மூடப்படுவதால், மாஸ்டர் பட ரிலீஸுக்கான சிக்கல் மேலும் வழுவாகியுள்ளது. 

இதையும் படிங்க: 

இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்துவிடும், கண்டிப்பா ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என படக்குழு நம்பிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தான் 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மாஸ்டர் படத்தின் ரீலீஸை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் படத்திற்கு அமெரிக்காவில் நல்ல மவுசு உள்ளதாலும் இந்த திடீர் முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!