கொரோனாவிற்கு முன்பு விஜய் போட்ட கட்டளை.... களத்தில் இறங்கி தூள் பறக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 9, 2020, 6:03 PM IST
Highlights

இந்த சமயத்தில் எங்க தளபதி கொடுக்கலைன்னா என்ன நாங்க இருக்கோம் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் தீயாய் சேவை செய்து வருகின்றனர்.  
 

தமிழ்நாட்டை தாண்டி கேரளா வரை தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்தாலும், சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துவருகிறார். ரசிகர்கள் மேல் கைவச்சால் சும்மா விடமாட்டேன் என்று பஞ்ச் டைலாக் எல்லாம் பேசினாலும், கொரோனாவிற்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. 

மத்திய, மாநில அரசுக்கு கொடுக்காவிட்டாலும் தங்களை நம்பி இருக்கும் பெப்சி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தொழிலாளர்களுக்காவது விஜய் உதவியிருக்க வேண்டும் என்பது திரைத்துறையினர் குற்றச்சாட்டு.  இந்த சமயத்தில் எங்க தளபதி கொடுக்கலைன்னா என்ன நாங்க இருக்கோம் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் தீயாய் சேவை செய்து வருகின்றனர்.  

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

மக்களுக்கு காய்கறி, அரிசி மூட்டை வழங்குவது, நமக்காக சேவையாற்றும் காவலர்களுக்கு உணவளிப்பது, தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் உடன் சேர்ந்து ஒரு மாத மளிகை பொருட்களையும் வழங்குவது என தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட கிருஷ்ணகிரி விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 49 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: 

இதற்கெல்லாம் காரணம் பிகில் ஆடியோ ரிலீஸில் விஜய் சொன்ன அந்த அட்வைஸ் தானாம். ஆமாங்க.. அந்த விழாவில் பேசின விஜய் , ட்விட்டரில் தேவையில்லாத ஹேஷ்டேக்குகளை உருவாக்கி வெறுப்பை விதைக்காதீங்க. சமூக பொறுப்புணர்வு உள்ள விஷயங்களை  செய்யுங்கள் என்று சொல்லியிருந்தார். அன்றிலிருந்து விஜய் ரசிகர்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் கொடுப்பது, பசியால் வாடும் முதியவர்களுக்கு உணவளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் வெளிப்பாடாக தான் இப்போது கொரோனா சமயத்திலும் சும்மா தூள் பறக்க சேவையாற்றி வருகின்றனர். 

click me!