புதிர்போடும் வெங்கட் பிரபு.. நாளை வரை வெயிட் பண்ண சொல்றாரு - ஒருவேள தளபதி 68 அப்டேட் சொல்லப்போறாரோ?

By Ansgar R  |  First Published Jul 29, 2023, 3:10 PM IST

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, இறுதியாக நாக சைதன்யா நடிப்பில் உருவான கஸ்டடி என்ற திரைப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன் தான், பிரபல நடிகரும், பாடகரும், சிறந்த இயக்குனருமான வெங்கட் பிரபு. சிறுவயது முதலிலேயே தனது பெரியப்பா மற்றும் தந்தையின் படங்களில் பாடிவந்த வெங்கட் பிரபு, அதன் பிறகு படங்களில் நடிக்க துவங்கினார். 

கடந்த 2007ம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் இவர் இயக்குனராக களம் இறங்கினார். அதன் பிறகு இவர் இயக்கத்தில் கடந்த 2019 வெளியான "கோவா" என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்றளவும் இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு என்றால் அது மிகையல்ல. 

Tap to resize

Latest Videos

வசூலில் மாஸ் காட்டும் சந்தானம்! DD ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு தெரியுமா?

கடந்த 2011ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படமும் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் தான். அந்த படம் வெங்கட் பிரபுவிற்கு ஒரு பிரேக் கொடுத்த படம் என்றே கூறலாம். சூர்யா, சிம்பு மற்றும் நாக சைதன்யா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ச்சியாக பல படங்களை இயக்கி வருகின்றார் வெங்கட்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்களுடைய 68வது திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஒவ்வொரு படத்திற்கும் வெங்கட் பிரபு பாலிடிக்ஸ், வெங்கட் பிரபு ஹாலிடே, வெங்கட் பிரபு ரி-யூனியன் என்று டைட்டில் வைக்கும் வெங்கட் பிரபு, தளபதி படத்திற்கு வெங்கட் பிரபு பஸ்ஸில் என்று பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

So what’s next…. Wait till tomorrow 11am.. pic.twitter.com/AKNxOvXm2b

— venkat prabhu (@vp_offl)

இது ஒருபுறம் இருக்க அவர் சில மணிநேரங்களுக்கு முன்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நாளை காலை 11 மணிக்கு ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த அறிவிப்பு தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகும் 68வது படம் குறித்த அப்டேட் அல்ல என்று கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை 600028 படத்தின் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், இது மூன்றாம் பாகத்துக்கான அறிவிப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை சாடும் ப்ளூ சட்டை மாறன்.. ஏன்?.. அன்று மாறன் கூறிய அதே கெட்ட வார்த்தையை ரிப்பீட் செய்த ரசிகர்கள்!

click me!