நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் டைட்டில் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. எனவே கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளத்தில், #தளபதி67 என்கிற ஹேஷ்டேக் தான் செம டிரெண்டிங்கில் தொடர்ந்து இருந்து வருகிறது.
அண்மையில் தளபதி 67 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், இப்படத்தில் நடிக்கும் நடித்தார் நடிகைகள் குறித்த அதிகார பூர்வ தகவலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்திருந்தது படக்குழு. அந்த வகையில், தளபதி 67 படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், நடிகை பிரியா ஆனந்த், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும்வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தின் டைட்டில் குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு, இப்படத்தின் டைட்டில் வெளியாகும் என தளபதி விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ். சற்று முன்னர், தபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் ஓடிடி நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை, சன் டிவி நெட்ஒர்க் வாங்கியதை அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.