இந்தியாவில் முதல் முறையாக அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகும் 'சண்டே'..!

Published : Feb 02, 2023, 07:03 PM IST
இந்தியாவில் முதல் முறையாக அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகும் 'சண்டே'..!

சுருக்கம்

இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் 'சண்டே' படம் பூஜையுடன் துவங்கியது..

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் சண்டே படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாலிவுட் சைஃபை படங்கள் இங்கு திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால்  நம் தாய்மொழியில் அதிகமாக சயின்ஸ் பிக்சன் படங்கள் உருவாவதில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில், இந்தியாவில் முதல் முறையாகத் தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது “சண்டே” திரைப்படம்.

இப்படத்தின் கதை திரைக்கதையை இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இருவருமாக இணைந்து இப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு அசத்தலான சயின்ஸ் பிக்சன் படமாக இப்படம் இருக்கும்.

'தளபதி 67' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!

இப்படத்தில் ஆதித்யா டிவி புகழ் விக்னேஷ் ராமமூர்த்தி  நாயனாக அறிமுகமாகிறார். நிவேதா & மித்ரா நாயகிகளாக நடிக்கின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஒரே கட்டமாக ஊட்டியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திரையில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புது அனுபவமாக இப்படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை சதீஷ் கீதா குமார் கவனிக்கிறார். செந்தமிழ் இசையில், கவி கார்கோ மேற்கொள்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை... 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா? ஆச்சர்ய புகைப்படம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் சுனாமி போல் வசூலை வாரிசுருட்டிய டாப் 10 கம்மி பட்ஜெட் படங்கள் - ஒரு பார்வை
கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்