
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதல்முதாக வந்த 'துப்பாக்கி' படத்திற்குப்பின் இவர்களின் கூட்டணி ரசிகர்களை திருப்தி படுத்தியது. இதனையடுத்து வந்த கத்தி பயங்கர வரவேற்ப்பை பெற்றது.
மக்களுக்காக போராடும் போராளியாக கத்தி, மெர்சல் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிரட்டியிருந்தார் விஜய். இதனையடுத்து மீண்டு விஜய் முருகதாஸ் கூட்டணி சண் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இணைகிறது. இப்படத்தில் விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 19-ம்தேதி பனையூரில் பூஜை போடப்பட்டு, அன்றைக்கே படப்பிடிப்பும் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
“எம்.ஜி.ஆர் ஸ்டைல் படங்கள்”
இதற்க்கு முன் நடித்த கத்தி படம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 'விவசாயி' படத்தை நினைவில் வைத்துக்கொண்டு இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது மீண்டும் இணைந்துள்ள இந்த படம் எம்.ஜி.ஆர் நடித்த 'படகோட்டி', 'மீனவ நண்பன்' படங்கள் மாதிரி மீனவர் வேடத்தில் நடிக்கப் போவதாக இப்படம் குறித்து செய்தியைப் பரப்பிவருகிறார்கள்.
அதற்க்கு ஏற்றது போல விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், காதில் ஸ்டெட் அணிந்து கெத்தாக இருக்கிறார். 'துப்பாக்கி'யில் ஸ்லீப்பர்செல், 'கத்தி'யில் விவசாய நிலங்களை அப்பாவி விவசாயிகளிடம் அபகரிக்கும் கும்பலை எதிர்த்துப் போராடும் போராளி இரண்டுமே வெவ்வேறு தளங்களில் இருந்தது.
“அனல் தெறிக்கும் அரசியல் வசனங்கள்”
கடந்த சில வருடங்களாகவே தமிழக மக்கள் அனுபவித்து வரும் கொடுமையான ஒரு விஷயத்துக்கு விடை சொல்கிற வகையில் தான் 'விஜய்-62' படத்தின் கதை இருக்குமாம். இந்தப் படத்தில் அரசியல் தெறிக்கும் வசனங்களை எழுத எழுத்தாளர் ஜெயமோகனைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
“முட்டுக்காடு பகுதியில் ஒரு பிரமாண்டம்”
இப்படத்தில், சமூக அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞனாக நடித்துக்கொண்டிருக்கிறாராம் விஜய். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு பகுதியில் படகுத்துறை இருக்கிறது. அங்கே செல்லும் ஆறு நேரடியாகக் கடலில் கலக்கிறது. அந்த இடத்தில் கடல் நீரும், நதியின் நீரும் கலக்கும் இடத்தில் பிரமாண்டமான செட் போட்டு அசத்தியிருக்கிறார்கள்.
விஜயின் வீடு நீலாங்கரையில் இருப்பதால் படப்பிடிப்பில் கால நேரம் பார்க்காமல் சந்தோஷமாக நடித்து வருகிறார். விஜய் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் வேடிக்கைப் பார்க்கச் சென்று விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு கி.மீ முன்னரே பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஷூட்டிங் நடக்கிறது. இப்போது நடந்துவரும் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் என்று சொல்கிறார்கள்.
"மக்கள் நடமாடும் பகுதிகளில் படப்பிடிப்பு"
இப்படத்தில் விஜயின் காட்சிகள் 90% காட்சிகள் முக்கிய நகரத்தில், குறிப்பாக மக்கள் நடமாடும் தெருக்களில் படமாக்க முடிவுசெய்திருக்கிறார், முருகதாஸ். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினாலும் விஜயை பார்க்க கூட்டம் கூடிவிடும் என்பதால், அனேகமாக அடுத்த ஷெட்யூல் புனேயில் நடத்துவதற்கு திட்டமாம் .
"ஆஸ்கர் நாயகன்"
உதயா, அழகிய தமிழ் மகன், 'மெர்சல்' என விஜய் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், மெர்சல் படத்தின் அவரது பாடல்கள் எல்லோருக்கும்ஜ் பிடித்ததால், இந்தப் படத்துக்கு விஜய் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரஹ்மானையே ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் முருகதாஸ்.
“மெகா பட்ஜெட்... மிரட்டும் கூட்டணி”
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படத்திற்குப் பின் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்தபடத்துக்குத் தயாரிப்பாளர் ஆனார் கலாநிதிமாறன். ' விஜய் படங்களில் இதுதான் பெஸ்ட்டாக இருக்கணும், அதற்காக எவ்வளவு எவ்வளவு செலவானாலும் பரவால்ல, பிரமாண்டமா பண்ணுங்க என ஏ.ஆர்.முருகதாஸுக்கு சொல்லிவிட்டாராம் கலாநிதி மாறன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.