நடிகர் விஜயின் மகன் சஞ்சய்யா இது...? வைரல் ஆகிவரும் புகைப்படம்..!

First Published Jan 27, 2018, 1:05 PM IST
Highlights
actor vijay son photo vairal spread


ரசிகர்கள் பார்வையில்:

ரசிகர்களை பொருத்தவரையில் விஜய்யாக இருந்தாலும் அஜித்தாக இருந்தாலும் எப்படி கொண்டாடி வருகின்றனரோ அதேபோல் அவர்களுடைய பிள்ளைகளைப் பற்றி எந்த ஒரு தகவல் வெளிவந்தாலும் அவர்களுக்கு ஸ்பெஷல் தான். 

இந்நிலையில் ஏற்கனவே நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலுக்கு தந்தையுடன் நடனமாடி விஜய் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். இதைத்தொடர்ந்து விஜயின் மகள் திவ்யாவும் 'தெறி' படத்தில் ஒரு காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் மகன்:

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் சிறுவயதில் எப்படி இருப்பார் என பல புகைப்படங்கள் வெளியானது ஆனால் இப்போது எப்படி இருப்பார் என யாரும் பார்த்தது இல்லை. தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் சமீபத்தின் அவருடைய அம்மாவின் உறவினர் திருமணத்தில் கலந்துக்கொன்டுள்ளார்.

வைரால் புகைப்படம்:

லண்டனில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இவர் கலந்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அவர் நல்ல உயரமாகவும், அசப்பில் விஜய் போலவும் உள்ளார். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

click me!