ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ஜெயலலிதா பட க்ளைமேக்ஸ் காட்சி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?...

By Muthurama LingamFirst Published Sep 25, 2019, 5:16 PM IST
Highlights

கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருக்கும் ‘தலைவி’படச்செய்திகள் தற்போது வலைதளங்களை அதிகம் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன. கங்கனா ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற எடுத்துக்கொள்ளும் மேக் அப் சிரத்தைகளை அவரது சகோதரி தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.
 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ‘தலைவி’என்ற பெயரில் இயக்கவிருக்கும் ஏ.எல்.விஜய் அப்படத்தில் சர்ச்சைக் காட்சிகள் எதுவும் வைக்க விரும்பாமல் அவரது பாஸிடிவான பக்கங்களையே படமாக்க விரும்புகிறார் என்று நாம் ஏற்கனவே சொன்னதை நடிகை கங்கனாவின் சகோதரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருக்கும் ‘தலைவி’படச்செய்திகள் தற்போது வலைதளங்களை அதிகம் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன. கங்கனா ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற எடுத்துக்கொள்ளும் மேக் அப் சிரத்தைகளை அவரது சகோதரி தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'சாந்த் கி ஆங்க்'. துஷார் ஹிரானந்தானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தாப்ஸி, பூமி பெட்நேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் இளம் வயது நாயகிகள் எப்படி வயதானவர்களாக நடிக்கலாம், மேக்கப் வேறு சரியில்லை என்று பலரும் கேலி செய்யத் தொடங்கினர்.இச்செய்திகளில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவிருக்கும் கங்கனாவின் பெயரும் அடிபட்டது.  இதனால் சர்ச்சை உருவானது. இதற்கு தாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் பதிலடிக் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க கங்கனாவிடம் கூடக் கேட்டார்கள். நீனா குப்தா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் பரிந்துரைத்தோம் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாந்தில். இந்தப் பதிவுக்கு சமூக வலைத்தள பயனர் ஒருவர் "அப்படியென்றால் கங்கனா ஏன் 'தலைவி' படத்தில் நடிக்க வேண்டும். நீனா குப்தாவே நடிக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி, "கபடமில்லாத 16 வயதில் நடிக்கத் தொடங்கி, மிகப்பெரிய நட்சத்திரமாக உருமாறிய பின் பதற்றமான தமிழகத்தின் இளம் முதல்வராகப் பதவிக்கு வந்த ஒரு நடிகையின் கதாபாத்திரம் தான் ’தலைவி’. அவர் 39 வயதில் முதல்வரானவர். அவர் முதல்வர் பதவி ஏற்கும் காட்சியோடு படம் முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் காட்சிகள் இருக்காது. எனவேதான் கங்கனா அதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் எடுப்பதால்தான் ஜெ’ தீபாவும், தீபக்கும் இப்படத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

click me!