ரஜினியுடன் மோதலை தவிர்த்த அஜித்... தல ரசிகர்கள் கனவில் மண்ணை போட்ட படக்குழு!

Published : Aug 18, 2021, 07:14 PM IST
ரஜினியுடன் மோதலை தவிர்த்த அஜித்... தல ரசிகர்கள் கனவில் மண்ணை போட்ட படக்குழு!

சுருக்கம்

செம்ம உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள் #Thaladiwali என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவிற்கு ட்ரெண்ட் செய்து வந்தனர். 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 


இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் வலிமை படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ​ இதையடுத்து நேற்று செம்ம உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள் #Thaladiwali என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவிற்கு ட்ரெண்ட் செய்து வந்தனர். 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வலிமை படக்குழு தீபாவளிக்கு முன்னதாகவே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா நேரத்தில் இரண்டு பெரியபடங்களை வெளியிட்டால் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்பதால், வலிமை படக்குழு விநாயகர் சதுர்த்திக்கே படத்தை வெளியிடலாமா? என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம். இதனால் தல தீபாவளி கொண்டாட காத்திருந்த அதிர்ச்சியில் உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Siragadikka Aasai : கர்ப்பத்தை கலைக்கச் சொல்லும் மனோஜ்... ரோகிணி போட்ட அதிரடி டீலிங்..!
Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?