
அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.
தோனி மகள் ஷிவாவைப் போல, நம்ம தல அஜித்தின் செல்ல மகன் ஆத்விக்கிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மிகவும் எளிமையான மனிதரான அஜித் மீது அவரது ரசிகர்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்களோ, அதே அளவிற்கு மகன், மகள் மீதும் பாசம் வைத்துள்ளனர்.
சமீபத்தில் அம்மா ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக் நின்று கொண்டிருப்பது போன்ற போட்டோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. எதிரே நின்று கொண்டிருக்கும் சிறுவனை ஆத்விக் அஜித் பார்த்துக்கொண்டிருக்கிறார். ப்பா... அந்த லுக்கு இருக்கே அப்பாவையே மிஞ்சிவிட்டார் குட்டி தல என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ஆத்விக்கின் க்யூட் போட்டோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.