
நடிகையும், பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியுமான சிவரஞ்சனியின் மாமனார் உடல் நல குறைவு காரணமாக இன்று அதிகாலை 2 மணி அளவில் மரணமடைந்துள்ள சம்பவம் அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சிவரஞ்சனி தமிழில் 'மிஸ்டர் கார்த்தி' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து 'தலைவாசல்', 'பொன் விலங்கு', 'அரண்மனை காவலன்' உள்ளிட்ட 20 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீ காந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீகாந்தை தந்தை, பரமேஸ்வர ராவ் கடந்த சில மாதங்களாகவே உடல் நல பிரச்சனை மற்றும் வயது மூப்பு காரணமாக அவதி பட்டுவந்தார்.
இந்நிலையில் இன்று நல்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார். ஹைதராபாத்தில் வைக்கப்பட்டுள்ள இவருடைய உடலுக்கு நடிகர் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.