
அன்பு கண்மணி, சரண்யா ரவி நடித்துள்ள ‘அவள் பெயர் திரெளபதி’குறும்பட போஸ்ட்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 500 ரூபாயை கொடுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதைப்போன்ற ஸ்டில்ஸை போட்டு அவமானப்படுத்தி இருக்கிறார். அந்தப்படத்தில் நடித்துள்ள சரண்யா ரவி வடசென்னை, குண்டு ஆகிய படங்களில் நடித்தவர்.
அவள் பெயர் திரெளபதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் டைட்டிலின் கேப்சனாக வெறித்துப்பார்ப்பதில் வேறெந்த மிருகமும் இப்படி இல்லை எனக்குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஸ்ரீராம் ராம் சுப்பு என்பவர் இந்த குறும்படத்தை இயக்கி உள்ளார்.
சில நாட்களுக்கு முன் திரெளபதி டிரெய்லர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதில் ஒரு சாதியினர் திட்டமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி நாடகக் காதல் செய்து ஏமாற்றுவதாகவும், அதன் மூலம் பணம் பறிப்பதாகவும் சொல்லப்பட்டு இருந்தது. இந்தப்படத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த திரெளபதியை தங்கள் வீட்டு பெண்ணாக, குலதெய்வமாக வன்னியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையலையில் திரெளபதி படத்தை இழிவு செய்யும் நோக்கத்தில் இந்தக் குறும்படத்திற்கு டைட்டில் வைத்துள்ளதாகவும், கேப்சன் போட்டு திரெளபதி கேரக்டரை டேமேஜ் ஆக்கும் வகையிலும், திரெளபதி கேரக்டரை விபச்சாரத்திற்கு அழைப்பதை போலவும் வேண்டும் என்றே இந்த போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.