உண்மையை சொல்லி மனதை கவர்ந்த 10 வயது சிறுவன்! குட்டி கதை சொல்லிய டிடி! வைரலாகும் வீடியோ...

Published : Feb 17, 2020, 04:02 PM IST
உண்மையை சொல்லி மனதை கவர்ந்த 10 வயது சிறுவன்! குட்டி கதை சொல்லிய டிடி! வைரலாகும் வீடியோ...

சுருக்கம்

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள் இருந்தாலும், அவர்களில் டிடி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இவர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம், நிகழ்ச்சிகளை விட்டு அகலாமல் தொலைக்காட்சி முன்பு அமர வைத்துவிடும்.  

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள் இருந்தாலும், அவர்களில் டிடி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இவர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம், நிகழ்ச்சிகளை விட்டு அகலாமல் தொலைக்காட்சி முன்பு அமர வைத்துவிடும்.

டிடி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து கொண்டேனா திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற்றம் ஒன்றில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் டிடியை பொறுத்தவரை, அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக பழக கூடியவர். சமீபத்தில் கூட இவரை கண்ட சந்தோஷத்தில், ரசிகை ஒருவர்  கட்டி பிடித்து அழுத வீடியோ வைரலாகியது.

மேலும் செய்திகள்: ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை நிலா! 36 வயதிலும் மூழ்கடிக்கும் கவர்ச்சி!

இதை தொடர்ந்து, தன்னுடைய ரசிகரான 10 வயது சிறுவன் எந்த அளவிற்கு தன்னிடம் உண்மையாக நடந்து கொண்டான் என்பதை விளக்கும் விதமாக, குட்டி கதை ஒன்றை கூறியுள்ளார்டிடி . மேலும் அந்த சிறுவனுடன் எடுத்து கொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதில்... ''10 வயது மதிக்கத்தக்க  சிறுவன் அவனது பெற்றோருடன் தன்னிடம் வந்து என்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்தான். எனவே நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பின்பு மீண்டும் என்னிடம் வந்த அவன் என்னை மிகவும் பிடிக்கும்  என்றும் அதனை சொல்வதற்கு பயமாக இருந்ததாகவும் தெரிவித்து மற்றொரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறி புகைப்படம் எடுத்து கொண்டான். எவ்வளவு இனிமையானவனாகவும் மரியாதை மிக்கவனாகவும் அவன் இருந்தான். இந்த அன்பு விலை மதிக்கமுடியாதது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ரஜினி, அஜித், விஜய் என யாரையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்!  அறிய புகைப்பட தொகுப்பு
 

பின்னர் நான் காரில் ஏறிய போது நான் அவனை பார்த்து கையசைத்தேன். அப்போது அவன் ஃபோனில் என்னுடன் எடுத்த ஃபோட்டோவை வால் பேப்பராக வைத்திருந்தான். நீ எங்க இருந்தாலும் சிறப்பானவனாகவும் ஜென்டில்மேனாகவும் வளர்வாய் உன்  தோழிகள் மிகவும் அதிர்ஷ்டசாலி உன் பெற்றோரும் என்று குறிப்பிட்டுள்ளார் டிடி.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி