விவேகம் படத்துக்காக அதிக ரிஸ்க் எடுக்கும் அஜித்... இதுவரை  பார்க்காத தலயின் சாகசம்...

 
Published : May 01, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
விவேகம் படத்துக்காக அதிக ரிஸ்க் எடுக்கும் அஜித்... இதுவரை  பார்க்காத தலயின் சாகசம்...

சுருக்கம்

Thala Ajith Risk for his Vivegam

அஜித் என்றாலே கடுமையான உழைப்பாளி என்று நாம் அறிந்த விஷயமே அதுவும் அவருக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்துவார். 

விவேகம் படத்தில் அப்படி பல விஷயம் பிடித்ததால் இந்த படத்துக்காக கொஞ்சம் ஸ்பெஷல் உழைப்பு, காரணம் பிடித்த இயக்குனர் இதுவரை வராத கதை, பிடித்த கதாபாத்திரம் இப்படி பல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதால் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் படம் விவேகம்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’ விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் தனது 46 வது பிறந்த நாளை படக்குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித். மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இப்படத்தில் பணியாற்றி வருபவர்களிடம் பேசிய போது, “அஜித் அதிகமாக தேதிகள் ஒதுக்கியது "விவேகம்" படத்துக்காகத் தான் இருக்கும். கதையைக் கேட்டவுடன் பிடித்துவிடவே, அந்த கதாபாத்திரத்திற்காக சுமார் 20 கிலோ வரை குறைத்து, உடம்பை மிகவும் சிலிம்மாக மாற்றிவிட்டார். 

70% படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் என்றாலும், மிகவும் கடுமையாக இருந்தது. கடுமையான குளிரில் மொத்த குழுவுமே பணிபுரிந்துள்ளோம்.

இன்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவின் மிக முக்கியமான நாடுகளில் நடைபெற்றுள்ளது. படத்தில் 6 பாடல்கள். ஒவ்வொன்றாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!