இதோ தல'யை பற்றி சில ஃபார்மல் மற்றும் இன்ஃபார்மல் தகவல்கள். கேளடா ரசிகா!...

 
Published : May 01, 2017, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இதோ தல'யை பற்றி சில ஃபார்மல் மற்றும் இன்ஃபார்மல் தகவல்கள். கேளடா ரசிகா!...

சுருக்கம்

Formal and informal information about Thala Ajith for His Fans

தமிழ் ரசிகனை பொறுத்தவரையில் தன் அபிமான ஹீரோ எது செய்தாலும் அது ஆஸம்! தான். அதிலும் அஜித் ரசிகனுக்கு தலையை பற்றி ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் வாலை சுருட்டி உட்கார்ந்தபடி கேட்பான்!

இதோ தலையை பற்றி சில ஃபார்மல் மற்றும் இன்ஃபார்மல் தகவல்கள். கேளடா ரசிகா!...

போட்டோ மேக்கிங் அஜித்துக்கு விருப்பமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் ஃப்ளாஷ் இல்லாமல் அவைலபிள் வெளிச்சத்தில் படமெடுக்கவே ரொம்ப விருப்பப்படுவார் அது உனக்கு தெரியுமா?

பாடல் காட்சிகளில் பின்னனி பாடகர் பாட, கேமெரா முன் நின்று வலிக்காமல் வாயசைப்பதுதான் பல ஹீரோக்களின் இயல்பு. ஆனால் பாடகர் ஹைபிட்சில் பாடினால் அதற்கு ஏற்ப அடிவயிற்றிலிருந்து முயற்சி எடுத்து ஏதோ இவரே பாடுவது போல்  பக்கா பாவனை செய்வதுதான் அஜீத்தின் ஸ்டைல். தீனா படத்தின் ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...’ பாடலைப்பார் இது புரியும்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்ததும் வயது வித்தியாசம், கிரேடு வித்தியாசம் பார்க்காமல் அத்தனை பேருக்கும் வணக்கம் சொல்வது தலயின் ஸ்டைல்.

தலயின் சமையலுக்கு லைஃப் டைம் ரசிகை த்ரிஷா. இதை அவரே ஓப்பனாக சொல்லியிருக்கிறார்.

அஜீத்துக்கு பிடித்த அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு தனி இடமுண்டு நண்பா.

தன் குழந்தைகளின் பிறந்த நாளை அவர்களின் வகுப்பு தோழர்களோடு கொண்டாட வைப்பது அஜித்துக்கு விருப்பம்.

அஜித்தின் விருப்ப கடவுள்களில் ஆஞ்சநேயருக்கு ஸ்பெஷல் பிளேஸ் உண்டு.

தன் பணியாளர்களுக்கு குவாட்டர்ஸ் கட்டிக் கொடுத்த பெரிய மனசுக்காரன்யா உன் தலைவன்.

ஸ்பாட்டில் பொசிஷன் மாற்றுகையில் லைட்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் பணியாளர்கள் தடுமாறினால் கூட ஓடிச்சென்று தோள் கொடுக்கும் காம்ரேடு ஹீரோ உன் தல.

தமிழத்தில் பைக் ரேஸில் பட்டையை கிளப்பும் ஏழை இளைஞர்களை பற்றிய டேட்டாக்களை கலெக்ட் செய்து தன் அடையாளமே இல்லாமல் யாரோ ஒரு மனிதரின் வழியே உதவுவிக் கொண்டிருக்கிறார் உன் தலைவன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!