அஜித்துடன் 500 கி.மீ. பைக் பயணம்... தலயின் சாகசத்தை வெளிச்சம் போட்டி காட்டிய நண்பர்... வைரலாகும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 02, 2020, 02:30 PM IST
அஜித்துடன் 500 கி.மீ. பைக் பயணம்... தலயின் சாகசத்தை வெளிச்சம் போட்டி காட்டிய நண்பர்... வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

அஜித் எப்போதும் ஒரு தனிப்பட்ட நபர் தான். அதனால் தான் எங்கள் வீடியோவை நாங்களே வைத்துக்கொள்வோம்.

தமிழ் திரையுலகின் தலை மகன் அஜித் நேற்று 49வது பிறந்த நாளை கொண்டாடினார். கொரோனா பிரச்சனை காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தல அஜித் கேட்டுக்கொண்டாலும், அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவிலாவது கொண்டாடி தீர்க்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். அதனால் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக் பல மில்லியன் ட்வீட்களை கடந்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் தூள் பறந்தது.

சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். தளபதி ரசிகர்களும் கூட #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தாறுமாறு வைரலாக்கினர். ஒருபுறம் அஜித்தும், விஜய்யும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இருவரும் ஒன்றாக இருப்பது போன்று டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்தது. 

இந்த கொரோனா சமயத்திலும் அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை ஒரு திருவிழா போல் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் அஜித்தின் நெருங்கிய நண்பரான சுஹைல் சந்தோக் என்பவர் தல பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: அஜித்தையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... தீயாய் பரவும் இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்கமாட்டீங்க....!

அத்துடன் உத்தேவகம் மற்றும் உண்மையான கனிவான உள்ளம் கொண்ட தல அஜித்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நல்ல ஆரோக்கியத்துடன்... சிரித்துக்கொண்டே இருங்கள்... அஜித் சார் உடன் 2103ம் ஆண்டு வீரம் படப்பிடிப்பின் போது 500 கிலோ மீட்டருக்கு பைக் சென்றேன். அப்போது எங்களுடைய ஹெல்மெட்டுக்கு உள்ளே இன்டர்காமை செட் செய்து, பேசிக்கொண்டே பைக் ஓட்டினோம். அது ஒரு சிறப்பான அனுபவம். அவரிடம் வாழ்க்கையையும், அதன் சவால்களையும் சமாளிப்பதை நான் நிறைய கற்றுக்கொண்டேன்.


அவர் எப்போதுமே எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தை மதிக்க கூடியவர். தன்னை  சந்திக்கும் அனைவரையும் எப்போதும் தனக்கு இணையாக அல்லது தன்னை விட உயர்ந்தவராக நடத்துவார். அந்த ரைடு சென்ற போது பல அழகான மனிதர்களை நாங்கள் சந்தித்தோம்,  உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் எங்களை காரில் துரத்தினார்கள். செக் போஸ்டில் கூட அஜித்தை பார்த்ததும் வியந்து சிரித்த பல போலீஸ்காரர்களை பார்த்தேன். அவரை பார்த்தால் அவரது ரசிகர்கள் உணரும் மகிழ்ச்சியை அருகில் இருந்து பார்த்தேன். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

அஜித் எப்போதும் ஒரு தனிப்பட்ட நபர் தான். அதனால் தான் எங்கள் வீடியோவை நாங்களே வைத்துக்கொள்வோம். தற்போது ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால், ஒரு சிறிய பகுதியை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!
செத்துப் பிழைத்துள்ளேன், எதுவும் பேச விரும்பவில்லை: மனவேதனையுடன் செல்வராகவன் பேசிய உருக்கமான வீடியோ!