நான் திருமணம் செய்யாததற்கு காரணமான நடிகர் இவர் தான்... காட்டி கொடுத்த தபு..

 
Published : Jun 30, 2017, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
நான் திருமணம் செய்யாததற்கு காரணமான நடிகர் இவர் தான்... காட்டி கொடுத்த தபு..

சுருக்கம்

thabu open talk about her life

நடிகர் அஜித்துடன் "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" , "காதல் தேசம்",  "சிறைச்சாலை", "சிநேகிதியே" போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை தபு. 

இவர் இந்தி மொழி படங்கள் மற்றும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

தற்போது 45 வயதாகும் தபு இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க என்ன காரணம்?  என பலர் கேள்வி எழுப்பியும் இது வரை வாய் திறக்காமல் இருந்த தபு முதல் முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நான் திருமணம் செய்யாததற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம். அவர் என் மிக நெருங்கிய உறவினரின் நண்பர். என் வாழ்வில் ஆரம்பத்தில் இருந்தே அவர் என்னுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். என் உணர்வுகள் அவருக்கு புரியும். யாராவது என்னை கிண்டல் செய்தால் அவருக்கு கோபம் வரும் என தபு கூறியுள்ளார். இப்போது அவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளார்.

நானும் தற்போது அவருக்கு நல்ல தோழியாக இப்போது வரை இருந்து வருவதாக கூறியுள்ளார். இதில் இருந்து தன்னுடைய காதல் நினைவுகளை சுமந்து தான் வாழ்த்து வருவதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார் தபு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!