பிச்சை எடுப்பது போல் ஆடுகிறார் - ஓவியாவை தொடர்ந்து அனுயாவை வம்பிழுக்கும் கஞ்சா கருப்பு…!!!

 
Published : Jun 30, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
பிச்சை எடுப்பது போல் ஆடுகிறார் - ஓவியாவை தொடர்ந்து அனுயாவை வம்பிழுக்கும் கஞ்சா கருப்பு…!!!

சுருக்கம்

Often gancha karpu criticizing anuya

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் மக்கள் ரசிக்கும்படி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அருவறுக்க தக்க காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டில் ஓவியா, அனுயா, கஞ்சாகருப்பு, சக்தி, சினேகன், நமீதா, ஆர்த்தி, கணெஷ் வெங்கட்ராம், ஜல்லிக்கட்டு ஜூலி உள்ளிட்ட 15 பேர் தங்கியுள்ளனர்.

சினிமா குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு சிரித்து பேசி நடித்தவர்கள் இப்போது எலியும் பூனையுமாய் சண்டை போடுவதும், அருவறுக்கதக்க வார்த்தைகளை உபயோகபடுத்தி திட்டிக்கொள்வதன் மூலமும் ரசிகர்களை கவரும் முயற்சியில் பிக்பாஸ் ஈடுபட்டு வருகிறது.  

நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே ஜல்லிக்கட்டு போரட்டத்தில் பங்கேற்ற ஜூலியை நன்கு வச்சி செஞ்சார்கள். அடுத்து வையாபுரியை தொடர்ந்தனர்.

இந்நிலையில், ஆரம்பம் முதலே நடிகை ஓவியா, வேலைகளில் ஈடுபடுவதில்லைஎனவும், ஓ.பி. அடித்துக் கொண்டு கிண்டல் செய்து கொண்டும் பாட்டு பாடிக் கொண்டும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையறிந்த குழு தலைவர் சினேகன், உணவருந்தும் டேபிளில் அனைவரும் அமர்ந்திருந்தபோது, இது பற்றி ஓவியாவிற்கு புத்தி சொல்கிறார். இதற்கு கடுப்பான ஓவியா பதிலுக்கு பதில் பேசி சலித்துக் கொள்கிறார்.

இதை பார்த்த கஞ்சா கருப்பு, கோபத்துடன் ஏம்மா அவருதான பேசிட்டிருக்காருல்ல நீ என்ன குறுக்கே குறுக்கே பேசுற? என்று கேட்கிறார்.

அதற்கு யு ஷட் அப் ஒகே என்று ஓவியா சொன்னதால் என்ன ஷட் அப் என்று கஞ்சா கருப்பு துள்ளி குதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைதொடர்ந்து, நேற்றைய நிகழ்ச்சியில், அனுயா நடனமாடியுள்ளார். இதை பார்த்த கஞ்சா கருப்பு இது என்ன டேன்ஸ் வாந்தி எடுக்குற மாதிரியும் பிச்ச எடுக்குற மாதிரியும் என கூறி அவரது போலவே நடித்து காண்பித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அனுயா எல்லோரையும் போல ஆளில்லாதா டீக்கடையில் டீ ஆத்த சென்று விட்டார். புரியலையா அதாங்க அந்த மைக் முன்னாடி போய் எல்லாரும் பொலம்புவாங்களே…. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!