விரைவில் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு... தேதியுடன் வெளியான அசத்தல் அறிவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 26, 2020, 01:44 PM IST
விரைவில் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு... தேதியுடன் வெளியான அசத்தல் அறிவிப்பு...!

சுருக்கம்

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனுக்கான புரோமோஷன் சமீபத்தில் வெளியிடப்பட்டு, அது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.     

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

 

இதையும் படிங்க: நயன்தாராவுடன் திருமணம் எப்போது?... உண்மையை ஓபனாக போட்டுடைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்...!

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்திருக்க வேண்டியது , ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழல்நிலை ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனுக்கான புரோமோஷன் சமீபத்தில் வெளியிடப்பட்டு, அது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

 

 

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-யை நாகார்ஜுனா தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

இதையும் படிங்க: திருமணமான மூன்றே மாதத்தில் வனிதாவின் 3வது கணவருக்கு ஏற்பட்ட சோகம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை?

இதுதொடர்பான அவரது ட்விட்டில், மீண்டும் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் ஃபுளோரில்.. வாட் எ வாவ்.. வாவ் என பதிவிட்டிருந்த நாகார்ஜுனா புரோமோ ஷூட்டிற்காக தயாராகும் சில போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி