அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! காரணம் இவர்தான்!

Published : Sep 13, 2019, 12:07 PM IST
அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! காரணம் இவர்தான்!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தமிழில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் பிக்பாஸ் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின், தெலுங்கிலும் பிக்பாஸ் 3 வது சீசன் துவங்கப்பட்டது.  தமிழில் கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தமிழில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் பிக்பாஸ் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின், தெலுங்கிலும் பிக்பாஸ் 3 வது சீசன் துவங்கப்பட்டது.  தமிழில் கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் இந்த முறை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் நானி ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

ரசிகர்கள் அனைவராலும் ரசித்து பார்க்கப்படும், இந்த நிகழ்ச்சி தற்போது தெலுங்கில் மிகவும் போராக போய் கொண்டிருக்கிறதாம். இதனால் இதன் டி.ஆர்.பி தற்போது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தொகுப்பர் நாகர்ஜுனா என்றே கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை அனல் பறக்க தொகுத்து வழங்கி வந்த இவர், தற்போது தொகுத்து வழங்கி வரும் விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம். ஏதேனும் ஒரு கருத்தை ஆழமாக சொல்ல அவர், தயங்குவதாக கூறப்படுகிறது.

அதே போல் போட்டியாளர்களும் இந்த சீசனில் உறுதியாக இல்லையாம்.  தற்போது விளையாடி வரும் போட்டியாளர்கள், திடமான மனநிலை இல்லாமல் விளையாடி வருவதாக மக்கள் கருதுகிறார்கள். மேலும் மக்கள் ரசிக்கும் விதத்தில் அவர்களால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை.  

இதனால், நாளுக்கு நாள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களில் எண்ணிக்கை வெகுவாக குறைத்து வருகிறது. அதே போல் இதன் டி.ஆர்.பி ரேட்டிங், அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?