’லாஸ்லியாவும் கவினும் காதலிக்கத்தான் வேண்டும்’... காதலுக்கு ஜே’ போடும் பிரபல இயக்குநர்...

Published : Sep 13, 2019, 10:45 AM IST
’லாஸ்லியாவும் கவினும் காதலிக்கத்தான் வேண்டும்’... காதலுக்கு ஜே’ போடும் பிரபல இயக்குநர்...

சுருக்கம்

‘ என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? ஆகவே கவினும் லாஸ்லியாவும் பிக்பாஸ் இல்லத்தில் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை’என்கிறார் பிரபல இயக்குநர் வசந்த பாலன்.

‘ என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? ஆகவே கவினும் லாஸ்லியாவும் பிக்பாஸ் இல்லத்தில் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை’என்கிறார் பிரபல இயக்குநர் வசந்த பாலன்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...கேரளா பிக்பாஸ் சீசன் 1’ தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி Pearle Maaney மற்றும் சின்னத்திரை நடிகர் Srinish Aravind கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள்.நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில்,எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல்.பார்க்க பார்க்க தித்திக்கும் காதல்.பார்க்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும். https://www.youtube.com/watch?v=SCkqs1p6Who

ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா,கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே “லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?...கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது.முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

இன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.”வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே? என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள், லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள்.

லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். ஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான்.சியர்ஸ்....அவரும் மகளின் காதலை விரும்பவில்லை.உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.
என்ன மகளே! கையில வேர்க்கிது? என்று கேட்க ’சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.

ஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாக தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய?

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது...என்று எழுதியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?