அசுரனையே அசைத்து பார்த்த கொரோனா.... டோலிவுட் முன்னணி ஹீரோ படத்திற்கு சிக்கல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 20, 2020, 11:57 AM IST
Highlights

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலை சீரானதும் ஐதராபாத் திரும்பிய படக்குழு, மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான “அசுரன்” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. நடுத்தர வயது தோற்றத்தில் திருமண வயதுள்ள மகனுக்கு அப்பாவாக நடித்து  அசத்தியிருந்தார் தனுஷ். இந்த படத்தில் நடித்ததற்காக தனுஷுற்கு பாராட்டுக்கள் குவிந்தது. மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்டார் நடித்திருந்தனர். 

படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து இந்தியில் ஷாரூக்கான் முதல் தெலுங்கில் மாஸ் சூப்பர் ஸ்டார்கள் வரை “அசுரன்” ரீமேக்கில் நடிக்க போட்டி போட்டனர். அப்படி நடந்த போட்டியில் அசுரன் தெலுங்கு ரீமேக் உறுதியானது. தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றார் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்பந்தமானார். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

மஞ்சுவாரியார் கேரக்டரில் ப்ரியாமணி நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கி வருகிறார். “நாராப்பா” என்ற தலைப்பில் தயாராகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாக தகவல்கள் வெளியான. தமிழக எல்லையோர பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

The longest shoot schedule in the history of Suresh Productions, "Narappa" has now been paused in view of threat of COVID-19. The team is heading back to Hyderabad today. (1/2)

— Suresh Productions (@SureshProdns)

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலை சீரானதும் ஐதராபாத் திரும்பிய படக்குழு, மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளது. அது சரி... ஹாலிவுட்டையே புரட்டி பார்த்த கொரோனாவிற்கு டோலிவுட் எம்மாத்திரம்...!

click me!