
ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கடும் போட்டி உருவாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர்கள் பலரும் தங்களுக்கு என தனித்தனி அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட முயன்று வருகின்றனர். அதன்படி நேற்று சென்னையில் தயாரிப்பாளர் டி.சிவா தலைமையிலான அணியின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!
அந்த குழுவில் தலைவராக டி.சிவாவும், பொருளாளராக முரளிதரனும், செயலாளர்களாக தேனப்பனும், ஜே.சதீஷ் குமாரும், துணைத் தலைவர்களால் ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோரும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர்கள் கூட்டத்தினரிடையே பேசினர். இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராதா ரவி பேசும் போது, நடிகர் விஷாலை மறைமுகமாக சாடினார்.
இதையும் படிங்க: ஆபாச வெப்சைட்டில் நிர்வாண போட்டோஸ்... கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மீரா மிதுன் செய்த காரியம்...!
எல்லாரும் ஒரே அணியாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், இதே மாதிரி தான் கடந்த முறையும் 3 அணியாக போட்டியிட்டு பிரச்சனைகள் வெடித்தது. ஒரு மகான் உள்ளே புகுந்தார், அவரால் தான் தயாரிப்பாளர் சங்கமே நாசமாய் போச்சு, புல்லு முளைக்கும் இடமாக மாறிவிட்டது என நடிகர் விஷாலை ஜாடை மாடையாக சகட்டு மேனிக்கு விமர்சித்தார்.
இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!
இது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அதற்கு ஒரு தமிழன் தான் தலைவராக வர வேண்டும். அந்த பதவிக்கு டி.சிவா தான் சரியான ஆள். நியாயத்திற்காக போராடக்கூடியவர். இந்த அணி தேறுமா, தேறாதா என்று யோசித்து பார்த்து ஓட்டு போடுங்கள். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் நான், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஏனென்றால் நடிகர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்தில் போட்டியிட மாட்டேன் என்று கூறினார். நாடக சங்க நடிகர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டதாகவும் நடிகர் விஷால் மீது மறைமுக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.