
கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும், எப்படிபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பிரபலங்கள் பலர் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல வீடியோக்களை வெளியிட்டும், ட்விட்டர் பதிவு மூலமும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் கொரோனா பற்றி தவறான கருத்தை அவர் தெரிவித்ததாக அவருடைய வீடியோவை அதிரடியாக நீக்கியது ட்விட்டர் இந்தியா.
இதை தொடர்ந்து, மற்றொரு பிரபலம் போட்ட ட்விட்டர் பதிவையும், ட்விட்டர் இந்தியா நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்...
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், கொரோனா வைரஸ் குறித்து ஒரு டுவிட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில்கொரோனா வைரஸ் குறித்து பவன் கல்யாண் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக அந்த ட்விட்டை நீக்கியுள்ளதாக டுவிட்டர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் பவன் கல்யாண் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் ட்விட்டுகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பிரபலமானவர்கள் ஒரு கருத்தை வெளியிடும் போது அது குறித்து வல்லுனர்களிடம் கேட்டு ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.